Monday, 12 September 2011

துரும்பும் மாப்பிள்ளை ஆனால் துள்ளும்...

சாதரணமான வாழ்வு:
மனிதனுக்கு நன்றி இல்லை...
சிறப்பான வாழ்வு:
நன்றி சொல்வதற்காகவே நல்லது செய்ய வேண்டும்..

தான் ஆடவிட்டாலும் தன தசை ஆடும்..
சிறப்பான வாழ்வில் வெறும் நம் மனிதர்காக மட்டும் அல்லது உள்ளத்தின் அசைவு உலகத்து உயிரை எல்லாம் தொடும்..

பிடிவாததிற்கு மருந்து இல்லை..
பிடிவாதம் தன்னை உயர்ந்தால் அது உயரும் அளவிற்கு எல்லை இல்லை..

கருடா சௌக்யமா?
உயர்வு வரும் போது தான் மனிதனுக்கு வாழ்வில் அதிக அடக்கம் வர வேண்டும்...

துரும்பும் மாப்பிள்ளை ஆனால் துள்ளும்...
மாப்பிள்ளைக்கு தான் அதிக அடக்கம் வேண்டும்..

ஏழையின் சொல் அம்பலம் ஏறாது..
சொல் சரியானால் அம்பலம் ஏழையின் சொல்லையும் ஏற்கும்...

புறங்கையை சுவைக்காது இருப்பது எப்படி?
உரிமைக்கு உரியது மட்டுமே சுவைக்கு உரியது...

சாதாரண வாழ்வில் உணர்ச்சி வசப்பட்டவன் உயிரையும் கொடுப்பான் .மாறினால் உயிரையும் எடுப்பான்..
சிறப்பான வாழ்வில் உணர்ச்சி உயர்ந்து உயிருடன் கலக்கும்...

முதல் உள்ளவன் மட்டும் முதலாளி..
வாழ்க்கைக்கு சிறப்பு சேர்க்கும் போது முதன்மை ஆனவனும் முதலாளி ஆகா முடியும்..

சாதாரண வாழ்வில்...பழக பழக பாலும் புளிக்கும்...
சிறப்பு சேர்க்கும் போது..நெருக்கம் அதிகம் அனால் இனிமை கூடும்...

சாதாரண வாழ்வில்..புறம் அகத்தை நிர்ணயிகிறது..
சிறப்பான வாழ்வில்...அகம் புறத்தை நிர்ணயிகிறது...

1 comment:

  1. //முதல் உள்ளவன் மட்டும் முதலாளி..
    வாழ்க்கைக்கு சிறப்பு சேர்க்கும் போது முதன்மை ஆனவனும் முதலாளி ஆகா முடியும்..//

    வாவ்வ்வ்வ்வ்வ்வ்... ரொம்ப அருமையா இருக்கு வைஷ்...

    ReplyDelete