Monday, 12 September 2011

அவசரமும் நிதானமும்

:

நிதானம் பொறுமை பொருத்துகொள்ளும் தன்மை, விடா முயற்சி சாந்தம் இலட்சியம் நம்பிக்கை நாணயம் விஸ்வாசம் சோம்பேறித்தனம் தைரியம் உஷார் பிடிவாதம் நிர்ணயம் ஆகியவையும் அவற்றிற்கு எதிரானவையும் சுபாவத்தை சேர்ந்தவை..

அவன் அப்படி தான் ...அவன் சுபாவம் மாறாது என்பது எவ்வளவு உண்மையோ அப்படி தான் நம் சுபாவமும் மாறாத ஒன்று...

நிதானம் உள்ளவன் ஜெய்க்கும் இடத்தில அவசரம் உள்ளவன் தோற்பான்..மற்ற எல்லா திறைமைகளும் இருவருக்கும் ஒன்று போல் இருந்தாலும் நிதானம் செய்து கொடுக்கும்..அவசரம் தோல்வியை பெற்று தரும்..

ஒரு முறை தோற்றபின் அந்த வேலையை மறந்து விடுபவர் விடாமுயற்சி உடையவருடைய வெற்றியை எதிர் பார்க்க முடியாது ..நடத்தை மேலெழுந்த வாரியாக உள்ளது...அதனால் அடிப்படையான காரியங்களை சாதிக்க முடியாது..குணம் அவசியம் என்றாலும் அஸ்திவாரம் போடா குணம் போதாது..

மற்றவர் அஸ்திவாரம் போட்டு எழுப்பிய காரியங்களை நிர்வாகம் செய்ய குணம் உதவும்..தன நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு உயர..சுபாவத்தில் திறன் இருக்க வேண்டும்...

இவற்றை எல்லாம் மனதில் கொண்டு ..நாம் மற்றவர் எவரையும் ஆராய்ந்து பார்க்காமல் நம் வாழ்கையை ஆராய்சிக்கு எடுத்து கொள்வோம்..முதலில் நல்லது கெட்டது பிரிந்து தெரியும்..கெட்டது விளக்கப்பட வேண்டியது என்பதில் மாற்று கருத்து இல்லை..க்ஷணம் தாமதிக்காமல் கெட்டதை விலக்க முன் வர வேண்டும்..இந்த நிலையில் மற்றவர் அனைவரும் நாம் எதிர்பார்ப்பது போல் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தெரியும்..

அதை விட்டு விட்டு..நியாமானது சரியானதை மட்டும் செய்ய முன் வர வேண்டும்...
இதுவே சிறப்பு சேர்பதற்கான முன்னேற்ற பாதை...

துரும்பும் மாப்பிள்ளை ஆனால் துள்ளும்...

சாதரணமான வாழ்வு:
மனிதனுக்கு நன்றி இல்லை...
சிறப்பான வாழ்வு:
நன்றி சொல்வதற்காகவே நல்லது செய்ய வேண்டும்..

தான் ஆடவிட்டாலும் தன தசை ஆடும்..
சிறப்பான வாழ்வில் வெறும் நம் மனிதர்காக மட்டும் அல்லது உள்ளத்தின் அசைவு உலகத்து உயிரை எல்லாம் தொடும்..

பிடிவாததிற்கு மருந்து இல்லை..
பிடிவாதம் தன்னை உயர்ந்தால் அது உயரும் அளவிற்கு எல்லை இல்லை..

கருடா சௌக்யமா?
உயர்வு வரும் போது தான் மனிதனுக்கு வாழ்வில் அதிக அடக்கம் வர வேண்டும்...

துரும்பும் மாப்பிள்ளை ஆனால் துள்ளும்...
மாப்பிள்ளைக்கு தான் அதிக அடக்கம் வேண்டும்..

ஏழையின் சொல் அம்பலம் ஏறாது..
சொல் சரியானால் அம்பலம் ஏழையின் சொல்லையும் ஏற்கும்...

புறங்கையை சுவைக்காது இருப்பது எப்படி?
உரிமைக்கு உரியது மட்டுமே சுவைக்கு உரியது...

சாதாரண வாழ்வில் உணர்ச்சி வசப்பட்டவன் உயிரையும் கொடுப்பான் .மாறினால் உயிரையும் எடுப்பான்..
சிறப்பான வாழ்வில் உணர்ச்சி உயர்ந்து உயிருடன் கலக்கும்...

முதல் உள்ளவன் மட்டும் முதலாளி..
வாழ்க்கைக்கு சிறப்பு சேர்க்கும் போது முதன்மை ஆனவனும் முதலாளி ஆகா முடியும்..

சாதாரண வாழ்வில்...பழக பழக பாலும் புளிக்கும்...
சிறப்பு சேர்க்கும் போது..நெருக்கம் அதிகம் அனால் இனிமை கூடும்...

சாதாரண வாழ்வில்..புறம் அகத்தை நிர்ணயிகிறது..
சிறப்பான வாழ்வில்...அகம் புறத்தை நிர்ணயிகிறது...

நாம் நம்பும் விஷயங்களில் ஒன்று..

புறங்கையை சுவைக்காத மனிதன் உண்டா? 

புற வாழ்கையில் நெறி இல்லாத மனிதனும் அக வாழ்கையில் மாசில்லாமல் இருப்பான். புறம் இயற்கைகுரியது..அகம் ஆன்மாவிருகுரியது...

பிறருக்கு உதவி செய்தல் நல்ல குணம் ..




உதவி செய்யும் மனப்பான்மை உயர்ந்தது.உதவி செய்யும் மனப்பான்மை உண்மையில் இருந்தால் உதவி செய்ய வேண்டிய நிர்பந்தம் இல்லை..சந்தர்ப்பம் ஏற்பட்டால் உதவலாம் . யாருக்கு உதவலாம் என்று தேடி போக வேண்டாம். பெற்று கொள்பவருக்கு ஒரு வரையறை உண்டு . ஓர் அளவு வரை நாம் செய்யும் உதவி அவருக்கு பலன் அளிக்கும்..அவருடைய அளவுக்கு மீறி உதவி செய்தால் அவருக்கு அது நல்லது செய்யாது..அவர் நமக்கு தீங்கு இழைக்க முயல்வர்...இது மனித சுபாவம்...

வணக்கம் நண்பர்களே

கர்மயோகி அவர்களின்  வார்த்தைகள் உங்களுக்கும் உதவும் என்று நம்புகிறேன்..

நீரோடையின் கரையோரம் நடக்க வாருங்கள்...
முடிந்தால் கருத்துகளில் நீந்தி பாருங்கள்...
சில சிந்தனைகளில் மூழ்கி பாருங்கள்...
வாழ்வில் தேவையற்றவைகளை மறந்தும் பாருங்கள்...
உங்களிலிருந்து உங்களை மீட்டு வாருங்கள்...

உங்கள் பயணம் இனிதே தொடரட்டும்...